Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
KeetruCinemaNews
சரண் இயக்கத்தில் வினய்

Vinay and Tanisha சரண் இயக்கத்தில் உருவாகும் ‘மோதி விளையாடு’ படத்தில் ‘உன்னாலே உன்னாலே’ வினய் கதாநாயகனாக நடிக்கிறார்.

ஜெமினி படத்திற்குப் பின் குறிப்பிடும்படியான வெற்றிப்படம் எதையும் சரண் தரவில்லை. அல்லி அர்ஜூனா, ஜேஜே, வட்டாரம் என அவர் இயக்கிய பல படங்கள் தோல்வியைத் தழுவின. இந்நிலையில் தற்போது அவர் இயக்கிவரும் படம் ‘மோதி விளையாடு’.

இந்த படத்தில் வினய் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு இணையாக காஜல் அகர்வால் நடிக்கிறார். இவர்களுடன் சந்தானம், வி.எம்.சி.அனீபா, மயில்சாமி ஆகியோரும் நடிக்கிறார்கள்.

இந்தப் படத்திற்கு எஸ்.ராமகிருஷ்ணன் கதை, வசனம் எழுதுகிறார். பின்னணி பாடகர் ஹரிஹரனும், லெஸ்லி லேவீசும் இணைந்து இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்கள். கவிஞர் வைரமுத்து பாடல்களை எழுதுகிறார்.

தன் வாழ்க்கைப் பாதையை மாற்றியவர்களை அடையாளம் கண்டு, அவர்களுடன் கதாநாயகன் மோதி விளையாடுவதுதான் கதையாம்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.