Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
KeetruCinemaNews
ரஜினியின் இளமை(!) ரகசியம்

Rajini படக்குழுவினரின் உபசரிப்பும், நல்ல சிந்தனையும் தான் குசேலன் படத்தில் இளமையாகத் தோன்ற காரணம் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.

நடிகர் ரஜினிகாந்த், நயன்தாரா, பசுபதி உள்ளிட்டோர் நடிக்கும் ‘குசேலன்' திரைப்பட பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் ரஜினி பேசியது:

இளமையாக இருப்பதற்கு நான் இமயமலைக்குச் சென்று வேர் பிடுங்கி சாப்பிடுவது கிடையாது. சாப்பாட்டில் 4 வெள்ளையான விஷயங்கள் - உப்பு, சர்க்கரை, மாத்திரை, அரிசி - ஆகியவற்றை சேர்ப்பதில்லை. இதெல்லாம் உடம்புக்கு. மனசுக்கு நல்ல சிந்தனைகள் இருக்கிறது. அதனால் நல்லா இருக்கேன். என்னைச் சேர்ந்தவங்களும் நல்லா இருப்பார்கள்.

‘குசேலன்' படத்துக்கு இளையராஜாவை போடலாமா என்ற யோசனை முதலில் இருந்தது. ஒரு நாள் வெயில் படத்தின் இசையைக் கேட்டேன். மிகவும் பிடித்திருந்தது. இந்தப் படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான், இளையராஜா சேர்ந்தது போல் இசையமைத்திருக்கிறார் ஜி.வி. பிரகாஷ். என்றார் ரஜினி.

விழாவில் தயாரிப்பாளர் கே.பாலச்சந்தர், இசையமைப்பாளர் ஏஆர். ரஹ்மான், இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்ட பலர் பேசினர்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.