Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
KeetruCinemaNews
விருதுக்கு அமீர்தான் காரணம் - பிரியாமணி

Priyamani பருத்தி வீரன் படத்திற்கு தேசிய விருது கிடைத்த சந்தோஷத்தில் மூழ்கியுள்ளார் பிரியாமணி. இதற்கு இயக்குனர் அமீரே காரணம் எனவும் கூறினார்.

பருத்தி வீரன் படத்தில் முத்தழகு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் பிரியாமணி. இந்தப் படத்திற்காக சமீபத்தில் இவருக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து பிரியாமணி கூறியதாவது:

தேசிய விருது கிடைத்ததை என்னால் நம்பவே முடியவில்லை. இந்தப் பெருமை இயக்குனர் அமீரையே சேரும். படத்தில் என்னை ஒரு கிராமத்துப் பெண்ணாகவே மாற்றி விட்டார். எங்கு சென்றாலும் என்னை முத்தழகு என்று தான் எல்லோரும் அழைக்கிறார்கள்.

இதேபோன்ற கதாபாத்திரங்களை ஒப்புக்கொள்ளாமல் ஏன் கவர்ச்சியாக நடிக்கிறீர்கள் என்றும் என்னை கேட்கிறார்கள். பருத்தி வீரனுக்கு பிறகு அதேப் போல் பல வாய்ப்புகள் வந்தன. ஒரே மாதிரி பாவாடை, தாவணியில் நடித்தால் கிராமத்து இமேஜ் வந்து விடும். எனக்கு அதில் விருப்பமில்லை. என்னால் எல்லா கேரக்டரிலும் நடிக்க முடியும் என்பதை நிரூபிப்பதற்காகவே கிளாமரிலும் கவனம் செலுத்துகிறேன்.

இவ்வாறு பிரியாமணி தெரிவித்தார்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.