Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
KeetruCinemaNews
கோபிகாவின் கடைசி படம்

Gopika திருமணத்திற்குப் பின் நடிப்பதில்லை என்று கோபிகா கூறுவதால், ‘கல்லுக்குள் ஈரம்’ தான் அவரது கடைசிப் படமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

அமெரிக்க மாப்பிள்ளையுடன் கோபிகாவுக்கு வரும் ஜுலை 17-ந் தேதி திருமணம் நடைபெற இருக்கிறது. திருமணத்துக்குப்பின் கோபிகா அமெரிக்காவில் குடியேறுகிறார். அதன் பின் சினிமாவில் நடிப்பதில்லை என்ற முடிவெடுத்துள்ளார்.

அவர் தற்போது நடித்து வரும் படம், ‘கல்லுக்குள் ஈரம்'. இந்த படத்தில் ரிச்சர்ட் கதாநாயக நடிக்கிறார். மேலும் சுமன், செந்தில், பானுசந்தர், முத்துக்காளை, ரேகா, அபிநயஸ்ரீ ஆகியோரும் நடிக்கிறார்கள்.

ஒரு கல்லூரி மாணவனும், ஒரு தாதாவும் ஒரே பெண்ணை விரும்புகிறார்கள். யார் அவளை மணக்கிறார்கள் என்பதே படத்தின் கதை. காதலனாக ரிச்சர்ட், காதலியாக கோபிகா, தாதாவாக சுமன் நடிக்கிறார்கள்.

எஸ்.ஏ.ராஜ்குமார் இசையமைக்கிறார். கே.எஸ்.லிங்கன் திரைக்கதை, வசனம், எழுதி இயக்குகிறார்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.