Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruCinemaNews
புதிய சாதனை படைக்கிறது இந்தி கஜினி

ammer-asinகடந்த இரண்டு வருடத்தில் வெளிவந்த படங்களின் வசூலை இன்னமும் வெளிவராத ஒரு திரைப்படம் முறியடித்திருப்பது இந்தித் திரையுலகில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தமிழில் வெளியான கஜினி திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதையடுத்து அதை இந்தியில் இயக்கி வருகிறார் இயக்குனர் முருகதாஸ். தமிழில் சூர்யா நடித்த பாத்திரத்தில் அமீர்கானும், அசின் நடித்த பாத்திரத்தை இந்தியிலும் அவரே ஏற்று நடிக்கின்றனர்.

இந்தப் படத்தின் படப்பிடிப்புக் காட்சிகள் நடைபெற்று வருகின்றன. வரும் மே மாதம் இந்தப் படம் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் படம் வெளிவருவதற்கு முன்பே அதிக அளவில் விற்று புதிய சாதனையை கஜினி படைத்துள்ளது. சவுத் இந்தியம் பிலிம்ஸ் என்ற நிறுவனம் படத்தின் உள்ளூர் உரிமையை 53 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளது. அதே போல் படத்தின் ஆடியோவும் 40 கோடி ரூபாய்க்கு விற்றுள்ளது.

ஷாருக்கான் நடிப்பில் வெளிவந்த ஓம்சாந்தி ஓம் படம் தான் 73 கோடி ரூபாய்க்கு விற்று சமீபத்தில் சாதனை படைத்திருந்தது. அதை கஜினி படம் வெளிவரும் முன்பே முறியடித்துள்ளது.



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com