மீண்டும் அஜீத் நயன்தாரா
அஜீத் நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து பெரும் வெற்றிபெற்ற படம் பில்லா. இந்தப் படத்திற்கு பிறகு இருவரும் அடுத்த படத்தில் மீண்டும் ஜோடி சேருகிறார்கள்.
ஐங்கரன் பிலிம்ஸ் தயாரிப்பில் அஜீத் அடுத்து நடிக்கவிருக்கும் படம் ஏகன். இதற்கு கதாநாயகித் தேர்வு கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நடந்து வந்தது. ஸ்ரேயா, கேத்ரினா, இலியானா என பலரின் பெயரும் பரிசீலிக்கப்பட்டது. ஆனால் இறுதியில் நயன்தாராவை தேர்வு செய்துள்ளனர்.
இந்தப் படத்தில் ஜெயராம், சுகாசினி, நவ்தீப், சுமன் ஆகியோரும் நடிக்கின்றனர்.
|