Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruCinemaNews
மணிரத்னம் படத்தில் விக்ரம்

maniratnam மணிரத்னத்தின் அடுத்த படத்தில் விக்ரம் நடிக்கிறார் என்ற செய்தி தான் இப்போது கோடம்பாக்கத்தில் ஹாட் நியூஸ்.

மணிரத்னம் இயக்கிய குரு படம் தமிழிலும் இந்தியிலும் வெற்றி பெற்றது. இதற்குப் பிறகு லஜ்ஜா என்ற படத்தை இயக்க பாலிவுட் சென்று விட்டார் மணிரத்னம். ஆமீர்கான் நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு வெளிநாடுகளில் நடந்து வந்தது. இந்நிலையில் தாரே ஜமீன் பார் படத்திற்காக ஆமீர்கான் சென்று விட்டதால் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது.

அந்தப் படம் வெளிவந்து விட்ட நிலையில் இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் கஜினி பட வேலைகளில் பிஸியாகி விட்டார் ஆமீர். இந்தப் படம் லஜ்ஜாவுக்கு முன்பே ஒப்புக்கொண்ட படம். இந்தப் படத்திற்கு பிறகு தன் முழு கவனத்தையும் லஜ்ஜாவில் செலுத்தப் போவதாக ஆமீர்கான் கூறியுள்ளார்.

இந்த இடைவெளியில் தமிழில் ஒரு படம் இயக்க மணிரத்னம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. அதில் விக்ரமை கதாநாயகனாக்க முடிவு செய்துள்ளார். ஆனால் விக்ரம் தற்போது கந்தசாமி படத்திற்கு முழு கால்ஷீட்டும் கொடுத்துள்ளதால் அதிலும் சிக்கல். எப்படியிருந்தாலும் மணிரத்னத்தின் அடுத்த படத்தில் விக்ரம் தான் ஹீரோ என்கிறது கோடம்பாக்கம்.



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com