Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
KeetruCinemaNews
தமன்னாவின் ஆனந்த தாண்டவம்

Tamanna தசாவதாரம் படத்தை அடுத்து ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரித்து வரும் படம் ‘ஆனந்த தாண்டவம்’. இந்தப் படம் தமிழில் தனக்கு நிச்சயம் ஓர் இடத்தைப் பிடித்துத் தரும் என்று நம்புகிறார் தமன்னா.

‘செல்லமே’ படம் வெற்றி பெற்றாலும், அதற்கு அடுத்து சரியான வாய்ப்புக்காக காத்திருந்த இயக்குனர் காந்திகிருஷ்ணாவுக்கு பெரிய வாய்ப்பாக ‘ஆனந்த தாண்டவம்’ படம் ஆஸ்கார் ரவிச்சந்திரன் மூலம் கிடைத்துள்ளது. கல்லூரி படம் நல்ல பெயரை வாங்கித் தந்தாலும், தொடர்ச்சியான வாய்ப்புகளைப் பெற்றுத் தராத நிலையில் தமன்னாவும் இந்தப் படத்தைத் தான் பெரிதும் நம்பியிருக்கிறார்.

இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். தமன்னாவுடன் சித்தார்த், ருக்மணி என்ற இரண்டு புதுமுகங்களும் நடிக்கிறார்கள்.

இந்தப் படத்தை அடுத்து ஆஸ்கார் ரவிச்சந்திரம் ஜாக்கி சானை வைத்து ஹாலிவுட் படம் ஒன்றை தயாரிக்கப் போவதாக கோடம்பாக்கத்தில் ஒரு செய்தி உலா வருகிறது.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.