Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
KeetruCinemaNews
உதவி இயக்குநர்களை நீக்கிய ஷங்கர்

Rajini and Shankar குசேலன் தோல்விக்குப் பின்னர், எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில் இருக்கிறது ரஜினியின் அடுத்த படமான ‘எந்திரன்’ படக்குழு.

இப்படத்தின் படப்பிடிப்பு பிரேசில், பெரு நாடுகளில் நடந்தது. அப்போது ரஜினி, ஐஸ்வர்யாராய் நடித்த பாடல் காட்சியின் புகைப்படங்கள் சிலரால் இரகசியமாக எடுக்கப்பட்டு இணையதளங்களில் வெளியிடப்பட்டது. இதனால் ஷங்கர் ரகசியமாக வைத்திருந்த ரஜினி கெட்டப் வெளியாகி விட்டது. இது ஷங்கருக்கு மிகுந்த கோபத்தைக் கொடுத்துவிட்டதாம். இருக்காதா பின்னே? பேரல் பேரலாய் பெயிண்ட் வாங்கி ரஜினியை இளமையாகக் காட்ட செய்த முயற்சிகள் வெளியே தெரிந்துவிட்டதே!

புகைப்படங்கள் வெளியானது குறித்து படப்பிடிப்பு குழுவினரிடம் ஷங்கர் விசாரணை நடத்தியிருக்கிறார். யாரெல்லாம் கேமரா செல்போன்கள் கொண்டு வந்தார்கள் என்று விசாரித்திருக்கிறார். இதையடுத்து ‘எந்திரன்' புகைப்படங்கள் வெளியானதற்காக 3 உதவி இயக்குனர்களை அதிரடியாக நீக்கியுள்ளார். இதோடு மேற்கொண்டு படங்கள் வெளியாகாமல் தடுக்க 9 பேர் அடங்கிய கண்காணிப்பு குழு ஒன்றையும் புதிதாக நியமித்திருக்கிறாராம்.



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.