Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
KeetruCinemaNews
கதாநாயகனாகும் இயக்குநர் சசிக்குமார்

Sasikumar and Jai ‘சுப்ரமணியபுரம்’ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பின்னர் அதன் இயக்குநர் அடுத்து ஒரு படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.

இந்தப் படத்தை இயக்கப் போவது ‘சுப்ரமணியபுரம்’ படத்தில் வில்லனாக நடித்த இயக்குநர் சமுத்திரக்கனி. படத்தின் பெயர் ‘நாடோடிகள்’. அண்மையில் ஆங்கிலப் பத்திரிகை ஒன்றிற்கு சசிக்குமார் அளித்த பேட்டியில்,

“சுப்ரமணியபுரம் படத்தின் கதை 1980களில் நடைபெறுவதாக இருந்ததால், அந்தக் காலகட்டத்தை அப்படியே திரைக்குக் கொண்டு வர நிறைய மெனக்கெட வேண்டி இருந்தது. அந்தக் காலத்தில் எடுக்கப்பட்ட திருமண வீடியோ, திருவிழாக் காட்சிகள் ஆகியவற்றைத் தேடிப் பிடித்து பார்த்தேன். அந்த காலகட்டம் குறித்து வெளிவந்த புத்தகங்களைப் படித்தேன். சந்தையில் தற்போது கிடைக்காத துணிகளை எல்லாம் மதுரை, தேனிப் பகுதியில் தேடிப் பிடித்தேன்.

படத்தில் வன்முறை அதிகம் இருப்பதாகக் கூறப்படுகிறது. கதையின் களனே அப்படி என்பதால் அதை தவிர்க்க முடியவில்லை.

படம் தங்களை அதிக அளவு பாதித்ததாக நிறைய பேர் சொல்கிறார்கள். இறுதிக் காட்சி அதிர்ச்சியையும் பயத்தையும் ஏற்படுத்தியதாக சொல்கிறார்கள். இதுதான் எனது வெற்றி” என்று கூறியுள்ளார்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.