Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
KeetruCinemaNews
ஆட்டநாயகன் சக்தி

Shakthi சிம்பு கதாநாயகனாக நடிக்கும் சிலம்பாட்டம் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கையில், லட்சுமி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தனது அடுத்த படத்தைத் தொடங்கி விட்டது.

படத்தின் பெயர் ‘ஆட்டநாயகன்’. இது அந்நிறுவனம் தயாரிக்கும் 27வது படமாகும். ‘தொட்டால் பூமலரும்’ படத்தின் மூலம் அறிமுகமாகிய சக்தி (இயக்குனர் பி.வாசுவின் மகன்) இந்தப் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார். விக்ரமனிடம் உதவி இயக்குநராக இருந்த கிருஷ்ணராம் என்பவர் இப்படத்தை இயக்குகிறார்.

படத்தின் முதல்பாதி குடும்ப கதையாகவும், இரண்டாவது பாதி அதிரடிக் கதையாகவும் இருக்குமாம். பில்லா படத்தில் ஆதித்யா என்ற போலீஸ் அதிகாரியாக நடித்த அனில் மேனன் இந்தப் படத்தில் சக்திக்கு அண்ணனாக முக்கிய வேடத்தில் நடிக்கிறார். முதல்கட்ட படப்பிடிப்பு கும்பகோணத்தில் நடைபெறுகிறது.

இந்தப் படத்திலாவது சக்தி நடிக்கிறாரா என்று பார்ப்போம்!



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.