Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
KeetruCinemaNews
குசேலன்: பிரியதர்ஷன் தாக்கு

Rajini ‘குசேலன்' படத்தில் ரஜினிக்காக கதையை மாற்றி படத்தின் ஜீவனைக் குலைத்து விட்டார்கள் என்று பிரபல இயக்குநர் பிரியதர்ஷன் விமர்சித்திருக்கிறார்.

‘குசேலன்’ படம் மலையாளத்தில் வெளியான ‘கத பறையும் போள்’ படத்தின் தழுவலாகும். மலையாளத்தில் மம்முட்டி நடித்த வேடத்தில் ரஜினியும், சீனிவாசன் வேடத்தில் பசுபதியும் நடித்துள்ளனர்.

இதே கதையை இந்தியில் ‘பில்லு பார்பர்’ என்ற பெயரில் இயக்குநர் பிரியதர்ஷன் எடுத்து வருகிறார். குசேலன் படம் குறித்து அவர் பேசுகையில்,

"கத பறையும் போள்" படத்தின் ஜீவன் குசேலனில் இல்லை. ரஜினிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, ரஜினி படம் மாதிரியே இப்படத்தை வாசு எடுத்துள்ளார். இது படத்தின் முக்கிய கோளாறு ஆகும். குசேலன் கதாபாத்திரங்களின் அறிமுக காட்சிகள் போல் நிஜக் கதையில் இல்லை.

இந்தியில் ‘பில்லு பார்பர்’' படத்தை நிஜக் கதையை மாற்றாமல் அப்படியே எடுத்துள்ளேன். இந்தியில் சீனிவாசன் வேடத்தில் இர்பான்கானும், சூப்பர் ஸ்டார் வேடத்தில் ஷாருக்கானும் நடிக்கிறார்கள். ஷாருக்கான் படத்தின் இறுதிக் காட்சியில் மட்டும்தான் தோன்றுவார் என்று பிரியதர்ஷன் கூறினார்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.