கமலுடன் நடிக்க காத்திருக்கிறேன் - பத்மப்ரியா
நான் கமலின் மிகத் தீவிர ரசிகை. அவருடன் இணைந்து நடிக்கும் நாளுக்காக காத்திருக்கிறேன் என பத்மப்ரியா தெரிவித்தார்.
தசாவதாரம் படத்திற்கு பிறகு கமல் நடிக்கும் படம் மர்மயோகி. இதில் அவருக்கு இணையாக மூன்று கதாநாயகிகள் நடிக்கிறார்கள். ஹேமமாலினி ஏற்கனவே அவருக்கு ஜோடியாக நடிக்க தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஹீரோயின்கள் பட்டியலில் பத்மப்ரியாவும் இருப்பதாக செய்திகள் வெளியானது.
இதுகுறித்து பத்மப்ரியா கூறும்போது,
நான் சின்ன வயது முதலே கமலின் தீவிர ரசிகை. அவருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தால் அது பெரிய அதிர்ஷ்டம் தான். மர்மயோகி படத்தில் நான் நடிப்பது குறித்து என்னிடம் பேச்சுவார்த்தை எதுவும் நடத்தப்படவில்லை. ஹீரோயின்கள் பட்டியலில் எனது பெயர் இருப்பதே பெருமைக்குரிய விஷயமாகக் கருதுகிறேன் எனத் தெரிவித்தார்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|