Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
KeetruCinemaNews
கதைக்கு முக்கியத்துவம் தரும் மீரா ஜாஸ்மின்

Meera Jasmine புதுமுக நாயகனுக்கு ஜோடி என்றாலும், நல்ல கதை, முக்கியமான வேடம் என்றால் உடனடியாக கால்ஷீட் கொடுத்து விடுகிறார் மீரா ஜாஸ்மின்.

அறிமுக இயக்குநர் வெற்றிவேந்தன் தனது ‘ஆதி நாராயணன்’ படத்தில் புதுமுக நாயகன் கஜனுக்கு ஜோடியாக நடிக்க முன்னணி நடிகைகள் பலரை அணுகியிருக்கிறார். அவர்களோ விஜய், சூர்யா என முன்னணி நடிகர்கள் நடிக்கும் படம் என்றால் உடனடியாக கால்ஷீட் தருகிறோம் என்று கூறி புதுமுகத்துடன் நடிக்க மறுத்துவிட்டனராம்.

வெற்றிவேந்தன் மீரா ஜாஸ்மினைத் அணுகியிருக்கிறார். அப்போது அவர் ஹைதராபாத்தில் படப்பிடிப்பில் இருந்திருக்கிறார். இயக்குநரை அங்கு வரவழைத்திருக்கிறார். படப்பிடிப்பு முடிந்து, இரவு 10.30 மணிக்கு கதை கேட்டிருக்கிறார். உடனே சம்மதம் தெரிவித்திருக்கிறார். காரணம் என்னவென்றால், படத்தில் அவருக்கு அவ்வளவு முக்கியமான வேடமாம்.

படத்தின் அறிமுக நாயகன் கஜன் கம்ப்யூட்டர் இன்ஜீனியராக இருந்து சினிமாவுக்கு வந்தவர். முதல் படம் என்ற பதட்டத்துடன் இருந்தவரை, மீரா ஜாஸ்மின்தான் நிறைய பேசி இயல்புக்குக் கொண்டுவந்தாராம்.

நல்ல மனம் வாழ்க!



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.