“சூர்யாவின் இன்னொரு பரிமாணம் வாரணம் ஆயிரம்”
இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் வாரணம் ஆயிரம் இந்த மாதம் வெளியிடப்பட உள்ளது.
இதுகுறித்து அவர் கூறும்போது,
ஏற்கனவே நானும் சூர்யாவும் இணைந்து பணியாற்றிய காக்க காக்க படம் பெரிய வெற்றி பெற்றது. அதைத் தாண்ட வேண்டும் என்ற ஆர்வத்தில் வாரணம் ஆயிரம் படத்திற்காக வேலை செய்துள்ளோம். இதில் சூர்யாவின் இன்னொரு பரிமாணத்தை பார்க்கலாம்.
16 வயது முதல் 45 வயது வரையிலான ஒரு மனிதரின் வாழ்க்கையை இந்தப் படத்தில் சூர்யா வாழ்ந்துள்ளார். அவருக்கு ஜோடியாக சமீரா ரெட்டி, சிம்ரன், திவ்யா ஆகியோர் நடித்துள்ளனர். இந்த மாத இறுதியில் படம் வெளியாகும் என கௌதம் மேனன் தெரிவித்தார்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|