Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Bank Worker's Unity
BWU Logo
ஜூலை 2007

வாலிபால் - சில தகவல்கள்
சுஜாதா

வாலிபால் ஒரு ஒலிம்பிக் குழு விளையாட்டு. ஒரு போட்டியில் இரு அணியினர் மோதுவர். ஒவ்வொரு அணியிலும் களத்தில் ஆறு வீரர்கள் இருப்பர். இதைத் தவிர 2 மாற்று வீரர்களும் இருப்பர்.

இரு அணியினரும் பந்தை மாறி மாறி நடுவில் உள்ள உயரமான ‘நெட்’டைத் தாண்டிக் கையால் தட்டுவர். யாரேனும் தவறு செய்தாலோ, பந்தை அடிக்காமல் விட்டாலோ, மாற்று அணிக்கு ஒரு புள்ளி கிடைக்கும். இதுபோல் 25 புள்ளிகள் முதலில் எடுத்த அணி, ஒரு செட் வென்றதாக அர்த்தம் அதுபோல் மூன்று செட்கள் வென்றால் போட்டியை வென்றதாக அறிவிப்பார்கள்.

இவ்விளையாட்டை உள்அரங்கத்திலும் விளையாடலாம், வெளி அரங்கத்திலும் விளையாடலாம். பீச் மணலிலும் விளையாடலாம். அங்கு விளையாடும் போட்டியை ‘பீச் வாலிபால்’ என்று கூறுவர். இவ்விளையாட்டை உலகுக்கு முதன்முதலில் 1985ஆம் ஆண்டு அறிமுகம் செய்தவர் வில்லியம் ஜீ மோர்கன் என்பவர்.

முதல் மற்றும் இரண்டாம் உலகப்போரின் போது இவ்விளையாட்டை அமெரிக்க ராணுவ வீரர்கள், உடல் ஆரோக்கியத்திற்காக விளையாடினர். அதுவே பிறகு உலகத் தர விளையாட்டாக மாறியது.

ஆசிய விளையாட்டு போட்டிகளில் வாலிபால் 1958ஆம் ஆண்டு நுழைந்தது. இப்போட்டி அவ்வருடம் ஜப்பான் நாட்டு தலைநகரமான டோக்கியோவில் நடைபெற்றது. அதில் நம் இந்திய அணியினர் மூன்றாம் இடம் பிடித்து வெண்கல பதக்கம் பெற்றனர். பிறகு 1960 ஆம் ஆண்டு இவ்விளையாட்டு ஒலிம்பிக் போட்டியாக மாறியது. தற்போது, ரஷ்யா, இத்தாலி, ஜப்பான், கியூபா, செக் ரிபப்ளிக், போலந்து, ஜெர்மனி மற்றும் அமெரிக்க அணிகள் இவ்விளையாட்டில் முன்னணியில் உள்ளனர்.

இந்தியா உலக அளவில் 217 நாடுகள் மத்தியில் 26ஆம் இடத்தில் உள்ளனர்.
இவ்விளையாட்டிற்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு உண்டு. லுஆஊஹ உடல்கல்விக் கல்லூரி மூலம் இந்தியாவிற்கு அறிமுகமான இவ்விளையாட்டில் நாம் ஆசிய அளவில் ஒரு நல்ல அணியாகத் திகழ்கிறோம். 1980 ஆம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் நம் ஆண்கள் அணி வெண்கலம் வென்றது.

நம் ஆண்கள் ஜூனியர் அணி 1994ஆம் ஆண்டு கத்தாரில் நடைபெற்ற போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றனர். இருமுறை இந்தியா உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்றுள்ளது. 1952ஆம் ஆண்டு எட்டாவது இடமும், 1956ஆம் ஆண்டு 21வது இடமும் பெற்றுள்ளோம். இது தவிர ரஷித் உலக போட்டி துபாயில் வருடா வருடம் நடைபெறும். அதில் நம் அணியினர் எப்பொழுதும் முதல் மூன்று இடங்களுக்குள் வருவர். அண்மையில் 2007ஆம் ஆண்டு நடைபெற்ற ஆறாவது ஆசிய யூத் போட்டியில் இந்திய மாணவர்கள் அணி இரண்டாம் இடம் பெற்றனர்.



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com