Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Bank Worker's Unity
BWU Logo
ஜூலை 2007

ஸாரே ஜஹான் ஸே அச்சா?
சி.பி.கிருஷ்ணன்

1873ம் வருடம், இன்றிலிருந்து 134 வருடங்களுக்கு முன்னால் இக்பால் என்ற கவிஞன் தோன்றினான். அவன்தான் “ஸாரே ஜஹான் சே அச்சா, ஹிந்துஸ்தான் ஹமாரா” (உலகில் உள்ள எல்லா நாடுகளிலும் மிகச் சிறந்த நாடு இந்தியா) என்று பாடினான். ஆனால் ஐக்கிய நாடுகள் சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி -

தலித்துகளுக்கு எதிராக, நடத்தப்படும் தீண்டாமைக் கொடுமையைப் பொறுத்தவரை - இந்தியா மிக மோசமான சில நாடுகளில் ஒன்றாக உள்ளது.

* இந்தியாவில் 17 கோடி SC மக்களும் 8 கோடி ST (மலைவாழ்) மக்களும் வாழ்கின்றனர்.

* 1991ம் வருடம் மொத்த தலித்துக்களில் 70% பேர் நிலமற்றவர்களாக (அல்லது) ஒரு ஏக்கருக்கும் குறைவான குறுநில உடமையாளர்களாக இருந்தனர்.

* ஆனால் 2000ம் வருடம் 75% ஆக உயர்ந்துவிட்டது.

* 6 கோடி குழந்தை உழைப்பாளிகளில் 2.4 கோடி பேர் தலித்துக்கள்.

* தேசிய சராசரி தனிநபர் வருமானம் ரூ. 4485/- ஆனால் தலித்துக்களின் தனிநபர் வருமானம் ரூ 3237/-

* 1985 மற்றும் 2000 ஆண்டுகளுக்கிடையிலான 16 ஆண்டுகளில் தலித்துகளுக்கெதிராக 3,57,945 வழக்குகள் பதிவாகி உள்ளன. பதிவாகாத வழக்குகள் 10 லட்சத்தைத் தாண்டும் என்று ஓர் ஆய்வு கூறுகிறது.

* ஆந்திராவில் நடத்தப்பட்ட ஆய்வில் தலித்துக்களுக்கெதிராக 141 வகையான குற்றங்கள் நடைபெறுவதாகக் கண்டறிப்பட்டன.

* தமிழகத்தில் 7000 கிராமங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் 40% கிராமங்களில் தீண்டாமைக் கொடுமை தாண்டவமாடுகிறது என கண்டறியப்பட்டது.

* 2001ம் ஆண்டு அகில இந்திய அளவில் SCக்களுக்கு எதிராக 33,503 குற்றங்கள் நிகழ்த்தப்பட்டன. அதில் 716 கொலை, 1316 பாலியல் பலாத்காரம், 400 கடத்தல்கள் அடங்கும். அதே வருடம் 6217 குற்றங்கள் ST மக்களுக்கு எதிராக நடத்தப்பட்டன. அதில் 167 கொலைகள், 573 பாலியல் பலாத்காரம், 67 கடத்தல்கள் அடங்கும்.

ஆறுதலான ஒரே விஷயம், இடதுசாரிகள் ஆளும் மாநிலமான மேற்கு வங்கத்தில் குற்றங்கள் மிக்க குறைவு. இதே 2001ம் ஆண்டு SCக்கு எதிராக 10 குற்றங்களும், STக்கு எதிராக குற்றங்களும் நடந்துள்ளன. இடதுசாரிகள் ஆட்சி நடத்தும் மற்றொரு மாநிலமான திரிபுராவில் 2001ம் ஆண்டு SCக்கு எதிராக 2 குற்றங்கள் புரியப்பட்டன. STக்கு எதிராக எந்தக் குற்றமும் நிகழவில்லை.

‘வல்லரசு’ ஆகத் துடிக்கும் கனவுகளில் சிலர் உலவும் தேசத்தின் சமகால நிலைமை இது. ‘ஹிந்துஸ்தான் ஹமாரா’ என குதூகலித்துப் பாடிய இக்பால் இன்றிருந்தால் வெட்கித் தலை குனிந்திருப்பான்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com