Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Bank Worker's Unity
BWU Logo
ஆகஸ்டு 2007

தவஞானி
மீ. உமாமகேஸ்வரி

வெளிச்ச அம்புகளை
சலனமின்றி உள்வாங்கி
நர்த்தனமாடும் நித்திரையை
ரிஷியைப் போல்
புறந்தள்ளி...

பற்றிய கரங்களின்
பிடி தளராமல்
பதித்த பாதங்களின்
தாளம் தப்பாமல்
மோன லயம் கூட்டி..
பின் தொடர்பவர்
எதிர் வருவது உணர
கர சேவை புரிந்து...

ஏற்ற இறக்கங்கள்
நேர்க்கோடு வளைவு
அத்தனையும்
சமன் செய்து..

சுற்றிலும்
முக்காடிட்டு உறங்கும்
மனிதர்களுக்கு நடுவிலும்
கண் பிசகாது
காரியமியற்றும்

இரவு நேரப்
பேருந்து ஓட்டுநரே
தலைசிறந்த தவஞானி

பத்திரமாய் வீடு திரும்பிய பயணிகளில்
எவரேனும் இதனை உணர்ந்ததுண்டோ?

மீ. உமாமகேஸ்வரி, கோவை
நன்றி : தீக்கதிர்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.