Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ani
Ani Logo
இணைய இதழ் அறிமுகம்


பதிவுகள். காம்

மெல்ல இனி தமிழ் சாகும் என்று ஆங்காங்கே சில பஞ்சுத் தலையர்கள் விசனப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அப்படி இல்லை. தமிழ் வளர்ந்து கொண்டிருக்கிறது. தமிழ் பரவிக் கொண்டிருக்கிறது. முன்னைக்கு ஒப்பிடுகையில் தற்போது தமிழ் இதழ்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. எழுதுபவர்களும் வாசிப்பவர்களும் அதிகரித்து உள்ளனர். தமிழகம் தாண்டி. இந்தியா தாண்டிருப்பவர்கள் அச்சிட்ட இதழ்களை பெற்றுக் கொள்ள இதழ்களைவிட அஞ்சல் விலை பன்மடங்காகிப் போய் விடும் நிலையில் இணையத்தை போல் சவுகரியமான ஒர் ஊடகம் வேறு ஏதுமில்லை என்பது சுத்தமான உண்மை.வலைத் தளங்களும், வலைப் பதிவுகளும் நாளுக்கு நாள் றுக்கமாகிப் கொண்டிருக்கிறது. அச்சில் வெளிவரும் முன்னணி இதழ்களும் இணையத்திலும் தங்கள் இதழ்களை வெளியிட்டு வருகின்றன. இணையம் புகுபவர்கள் மட்டுமல்லாமல் அனைவரும் அறிந்த ஒரு மின்னிதழாக "பதிவுகள்' தளத்தை குறிப்பிடலாம். மாத இதழென்ற அறிவிப்போடு அவ்வாறே புதுப்பிக்கப்பட்டு வரும் இந்த இணைய இதழின் ஆசிரியர் வ.ந. கிரிதரன் ஆவார். அரசியல் கவிதை, சிறுதை, கட்டுரை நூல் விமர்சனம், நிகழ்வுகள், அறிவியல், சினிமா, நாவல், வாதம், ஆகியவைகளோடு உங்கள் நலம், தமிழ் வர்த்தக கையேடு, இலவச வரிவிளம்பரம், நூல் அங்காடி மற்றும் வாசகர் எதிரொலி என பல அடுக்குகளை கொண்டு கனத்துக் கிடக்கிறது இந்தத் தளம்.

உலகத்தின் அனைத்து மூலையிலும் உள்ளழுத்தாளர்கள் தங்கள் படைப்புகளை பதியும் ஒரு தளம் என்றால் மிகையாகாது. அரசியல் கட்டுரைகளும் ஆய்வுக் கட்டுரைகளும் வாசிக்க வேண்டிய சிறப்புப் பகுதி சிறப்பான ஆங்கிலக் கட்டுரைகளையும் ஏற்றுகிறார்கள். இளம் எழுத்தாளர்களை ஊக்கப் படுத்தும் வகையில் அவர்களின் படைப்புகளை தக்க ஒவியங்கள்/புகைப்படங்கள் இணைப்புடன் வெளியிடுவது இவர்களின் ஈடுபாட்டுக்கு ஒரு சான்று. விமர்சனங்கள் மற்றும் விவாதங்கள் இங்கு புதிய பரிணாமம் பெற்றிருக்கிறது. இன்று தமிழ் அச்சேடுகளில் எங்கும் காணக் கிடைக்காத அறிவியல் கட்டுரைகளை பதிவுகள் தளத்தில் காணலாம். பதிவுகள் தளத்தின் படைப்புகளை யாரும் எடுத்தாளலாம் என்று பெருந்தன்மையோடு அனுமதித்திருக்கும் நிலையில் அச்சு இதழ்களும் பிற இதழ்களும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

தங்கள் வர்த்தகம் குறித்து இலவசமாக விளம்பரம் செய்து பயன் அடையுங்கள் என்று வாசல் திறந்து வாய்ப்பளித்து உள்ளது இந்த இதழ். தமிழர் விழாக்களை முன்னிட்டு சிறப்பிதழ்களும் புதுப்பிக்கப்படுகின்றன. உலகெங்கும் உள்ள தமிழ் அமைப்புகள், இலக்கிய மற்றும் முக்கிய நிகழ்ச்சிகள் குறித்து புகைப்படங்களுடன் செய்தி வெளியிடப்படுகிறது. நல்ல திரைப்படங்கள் குறித்து சிறப்பான விமர்சனங்களும் நூல் மதிப்புரைகளும் பாராட்டத் தக்கவைகள். வீண் அரட்டைகளும் விவாதங்களும் இந்த தளத்தில் இல்லை. ஆக்கப் பூர்வமான படைப்புகளை எதிர்பார்க்கும் எவரும் இந்த தளத்தை திறக்கலாம் தங்கள் படைப்புகள் காலத்தால் அழியாமலும் வெகுமக்களால் படிக்கவும் பாராட்டவும் பட வேண்டும் என்று விரும்புவர்கள் உடனடியாக இந்த இணைய இதழை காணுங்கள். பதிவுகள் தளம் காலத்தின் அத்தனை நிகழ்வுகளையும் மிகச் சரியாக பதிவு செய்து வருகிறது. பாராட்டலாம் பார்த்து ருசிக்கலாம்.

இணைய முகவரி
www.pathivugal.com


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com