நடை பாதை
நா.சுப்புலட்சுமி
வாழ்ந்தும் வாழாதவனின்
அரசியலை பேசும் வயிறு
உறைவிட சிக்கல் எந்த
ஊரிலும் கூலிக்கில்லை
ஒதுங்கிய இடமெல்லாம்
வாகனத்தில் வரும் சொர்க்கவாசல்...
உடலை மறைக்க
கந்தல் போதும்..
2ரூபா அரிசி
இலவசவேட்டி, சேலையுடன்
தொலைக்காட்சி பெட்டி
வாயு இணைப்பும் வாங்க...
விலாசமற்ற அவனின் வாக்கு
அடுத்தவர் விரலில்
அடையாளத்தோடு....
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|