Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Ani
Ani Logo
மே - ஜூலை 2008

மரங்கள்
சோலை. இசைக்குயில்

இப்போது
காணவில்லை புத்தன்களை
மரங்கள் மரித்துப் போனதால்!

ஓசோன் படல
ஓட்டைப் பெரிதானதால்
யூகலிப்டஸ் மரங்களுக்கு
தலை வலித்தது!

சிலுவை மரங்கள்
தன்னையே
அறைந்து கொண்டன
கல்லறைகளில்!

சாக்கடையில்
வளர்ந்ததால்
சந்தன மரமும்
துர்நாற்றம் அடித்தது!

கட்சிக்கொடிகள்
பறந்தன
முருங்கை மரத்தில்!

இந்திய தேசியக் கொடி
பறக்கிறது
தேக்குமரத்தில்!

தூக்குமரம்
தலைக் குனிந்தது
எட்டப்பன்களை எண்ணி!

அனைத்து மரங்களையும்
அழித்து விட்டு
அலைந்துக் கொண்டிருக்கின்றன
ஆறறிவு மரங்கள்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.