Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Ani
Ani Logo
மே - ஜூலை 2008

நடம்மா நான் மழை
பாரி கபிலன்

கருகருன்னு இருட்டிக்கிட்டு வருது வானம்
காத்தும் மழையுமா
நொறுக்கப் போவுது

ஓட்டமா ஓடிடு வீட்டுக்குன்னு
அனுப்பி வைப்பாங்க
நடம்மா

போனேனா இல்லையான்னு
உசரமான வரப்புமேல
ஏறி நின்னுப் பார்க்கும் அந்த மனசு
மழையை விடவும் ஈரமானது

ஓடத்தொடங்கி
சில முள் வேலிகளைத் தாண்டியிருப்பேன்
அதற்குள் சடசடக்கும் மழை

மார்பில் குதித்து வழிந்து
வயிறு தொடுகையில்
சோ×ட்டித் தடவிப்பார்த்த
விரல்களின் ஞாபகம்

அடித்த விரல்
அரவணைத்த விரல்
மழையாகவும் இருக்கின்றது

ஆனாலும் ஓடிவருவேன்
குலுங்கி வலிக்கும் வயிற்றை
இறுக்கிப் பிடித்துக் கொண்டு

அம்மா சொன்னாங்கன்னு
பாதி தூரம்,
என் மீதித் தூர ஓட்டமெல்லாம்
எனக்கென்றிருக்கும்
ஒரேவொரு கால்சட்டையும்
நனைந்து விடக் கூடாது
என்பதற்காகத்தான்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.