கவிதாஞ்சலி
கவிஞர் மீரா
நவயுவக் காதல்
உனக்கும் எனக்கும்
ஒரே ஊர்
வாசு தேவ நல்லூர்...
நீயும் நானும்
ஒரே மதம்...
திருநெல்வேலிச்
சைவப் பிள்ளைமார்
வகுப்புங் கூட....
உன்றன் தந்தையும்
என்றன் தந்தையும்
சொந்தக்காரர்கள்
மைத்துனன்மார்கள்
எனவே
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம்
தாம் கலந்தனவே!
துண்டு விழுந்தது
அந்தி மாலையில்
அந்த மேடையில்...
“இங்கே பலப்பல
இரங்கற் கூட்டம்
நடப்பதண்டு;
நானும் தலைமை
வகிப்பதுண்டு
உங்கள் முயற்சியை
வாழ்த்துவதுண்டு;
மக்களும் கேட்டு
மகிழ்வதுண்டு...''
தலைவர் வாயில்
அடிக்கடி துண்டு
விழக் காரணம் அவர்
கழுத்தில் துண்டு
விழாக் காரணமென
விரைவில் புரிந்தது.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|