Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Ani
Ani Logo
மே - ஜூலை 2008

என் பசி
மராத்தி மூலம்: கவிதா மகாஜன்
ஆங்கிலம் வழி தமிழில்: புதிய மாதவி

ஒத்துக் கொள்கிறேன்
நான் உன் அடிமை என்பதை.

உணர்ந்து கொண்டேன்
இழந்துப்போன
என் உரிமைகளை.

நானே வலிய வந்து ஏற்றுக்கொண்டு விட்டேன்
என் சுதந்திரம் பறிக்கப்பட்டதை

என்னைக் கட்டிப்போட்டிருக்கும்
சங்கிலியின் மறுமுனை
உன் வசம்.
நீ ஆட்டுகிறாய் என்னை ஆட்டுவிக்கிறாய்
காட்சிப்படுத்துகிறாய்.
என்னைக் காட்சிப்பொருளாக்கும்
கண்காட்சிகளை என் சம்மதத்துடனேயே
அரங்கேற்றுகிறாய்.

என்னை விடுவிக்க என் மீது கொண்ட
அபரிதமான உன் காதலால் கூட
என் கட்டுகளை அவிழ்க்கும்
நாட்களைப் பற்றி பேசாதே.

உன் வாசலுக்கு வெளியே
என்னைக் கட்டிப்போடும்
காலச்சங்கிலிகள்
சிறைவைக்கும் சிறைக்கூடுகள்
காத்திருக்கும் சிவந்த சவுக்கள்

கெட்டுப்போன எச்சில் பருக்கையை
என் தட்டில் பரிமாற
காத்திருக்கும் ராட்சதக் கைகள்

என்ன செய்யட்டும்
இருந்துவிட்டுப் போகிறேன்
உனக்கு மட்டுமேயான
அடிமையாக.

களைத்துப் போய்விட்டேன்.
கண்டவர்கள் கால்களை எல்லாம்
நக்கி வறண்டு போய்விட்டது
என் நாக்குகள்.
அதில் பிறக்கும் என் வார்த்தைகள்
வலிமை குன்றிவிட்டன
எழுந்து நிற்க முடியாமல்
சரிந்து விழுகின்றன.
பற்களுடன் உரசியப்பின்னும்
என் நாக்குகளுக்கு
கிடைக்கைவில்லை
வார்த்தைகளின்
ஒலிச்சுவடு.

என் உதடுகளைப் பற்றிக் கொள்ள துடிக்கும்
வார்த்தைகள்
எல்லா இடங்களிலும்
பலகீனமாய் எதிரொலிக்கின்றன.

எதுவும் மிச்சமில்லை என்வசம் இப்போது.
கண்களில் தென்படும் கடைசி
எதிர்பார்ப்பைத்தவிர:

உன் தட்டில் எஞ்சி இருக்கும்
கடைசிப் பருக்கையை தருவாயா
என் பசித்தீர்க்க?


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.