Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Ani
Ani Logo
மே - ஜூலை 2008

புதுவழி
விழி. பா. இதயவேந்தன்

தேடிப் போய்க்கொண்டிருக்கிறேன்
ஓர் புதுவழித்தடம் நோக்கியபடி.

காற்றின் திசைகள் அறிந்து
ஒளிகளின் திசைகள் குறிபார்த்து
கடக்கிறேன் ஓர்
பெரும் பயணத்திற்கான முன்னீடாய்

ஒருபோதும் உணர்ந்ததில்லை
என் தனி வழிப்பயணத்திற்கான
கடைகோடி எல்லையினை

விரிந்த வெண்சாம்பலான வானத்தின் கீழ்
வேறோர் எண்ணங்கள் புடைசூழ
கட்டுக்கடங்காமல் கடந்துவிட முடிகிறது.

ஒற்றையில் உலகை வலம் வரத்துடிக்கிறது
உள்ளுக்குள் உட்கார்ந்தபடி மனசு.

இதயத்தை இறுக்கி
நினைவுகளை வடிகட்டி
எண்ணங்களைச் சுருக்கி
முடித்துக் கொள்ள வேண்டும்
எனது நேர்த்தியான
விட்டுப்போன பயணம் என்பதை


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.