Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Ani
Ani Logo
மே - ஜூலை 2008

இரணம்
ச. அன்பு

கனவில் கை தேடும் விரல் வருடல்
பகல் பொழுதுகளை
பதம் பார்க்கத் தொடங்கின!

குரல் ஒடுக்கம்; குரலில் ஒடுக்கம்
இரணத்த இதயம் இரத்தம் கசிய
இதுவரைப் பார்த்திடாத கண்களுக்குள்!

எலும்புக் கூடுகளுக்கிடையே
நாவை திறந்து மூடி, மூடி திறந்து
இழந்த குமிழிகளின் விபரீதம் நிறைய...
திசை தெரியாது நீடிக்கிறது
நிசப்தம் மட்டும் மனித மனங்களில்...

முடியவில்லை யாருக்கும்
சரிந்த பிம்பங்களை
சலிப்பின்றி பார்க்க...

காயங்களாய் பெருகும்
குருதியின் ரணம் வியாபித்து
வழிந்தோடும் அசைவுகள் எங்கிலும்
காயங்கள்!
விழிக்கும் பொழுத நள்ளிரவு நீள...
தூங்கும் நேரம் துக்க இழைகளின்
ரீங்காரம்!

பயத்தை ரசித்தப்படி
எண்ணற்ற வழிகளில்
பாவங்களும்... பரிதாபங்களும்...
உடலுதவா உயிர் புணர்வதை
கண்டு தேட ....
அலர் அலர் அலர்.

மெல்ல மெல்ல மனிதம் வெளியேற...
பிரேதமானேன் நானுங்கூட...
தூக்கம் பாவிக்கும் நிலையில்
இனியெல்லாம் மரணம் கூடவே!


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.