மனித தலையீடுயில்லாமலிருந்தால்... எஸ். விஜயன்
குப்பை மலையில்
கோழிகள் உற்சாகமாய்..
மேய்ந்து கொண்டிருக்கும்....!!
அன்னப் பறவைகள்
ஆர்ப்பாட்டமாய்...
நீச்சலை தொடரும்...!!
குளத்து மீன்கள்
துள்ளிக் குதித்து...
வானம் பார்க்கும் .... !!
கடற்கரையில் சுதந்திரமாய்...
ஓட்டப் பயிற்சி எடுக்கும் நண்டுகள் ...!!
கூடுகட்டிய குருவிகள்
குடித்தனமிருக்கும்.... !!
மௌனமாய் நத்தைகள்,
பாத யாத்திரை ...
சென்று கொண்டிருக்கும் ... !!
இவைகளுக்கும், நகர்கின்றது நாட்கள்..
நலமாய்... மனித தலையீடுயில்லாமலிருந்தால்.
|
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. படைப்புகளை அனுப்பும்போது தாங்கள் பயன்படுத்திய எழுத்துரு எதுவென்பதைத் தெரியப்படுத்தவும்.
|
Keetru | Tamil | Tamilnadu | Literature | Cinema | Recipe | Joke
|
|
 |
|