புத்தர் வந்தான் சோலை ஸ்ரீனிவாசன்
வர்ச கூலிக்கெல்லாம்
செரைக்க முடியாதுனுட்டு
கேரளா போய்
சித்தாள சேந்து
கொத்தனாரா மாறிட்டான்
புத்தர் என்கிற வீரபுத்தன்
தொழிலு
தெரியுமினுட்டு
ஊருக்குள்ளாற வந்தவுடன்
கத்தி புடிக்கிற கையில - அவன்
கரண்டி புடிக்கட்டும்
பார்க்கலாம்
ஆவேசப்பட்டது ஆசாரி மாறுக
ஷேவிங் - பத்து ரூவா
கட்டிங் - இருவது ரூபானு
கட எல்லாம் போட்டாலும்.
அப்பப்போ பாத்ரூம் கட்டவும்
செல நேரம்
பாத்ரூம் அடசல் எடுக்கவும்
போயிட்டுதான் யிருக்கான்
வீரபுத்ரன் என்கிற புத்தர்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. படைப்புகளை அனுப்பும்போது தாங்கள் பயன்படுத்திய எழுத்துரு எதுவென்பதைத் தெரியப்படுத்தவும்.
|
|