லிமரைக்கூ கன்னிக்கோயில் ராஜா
காலில் தங்க கொலுசு
அதன் அழகியில் மயகுக்
சொக்கி கிடக்கும் மனசு
ஐந்தறிவு ஜீவன்களிடம் பாசம்
அரவானிகளைக் கண்டு முககம்சுளிப்பர்
இது நல்ல வேசம்
இரவு கனவுகளில் திளைத்தான்
துயில்நீங் எழுந்த பின்
குடும்ப கவலைக்கண்டு திகைத்தான்
சேலம் இரும்பு ஆலை
மக்கள் வீட்டின் பயன்பாடோ
மண்பாண்டம் அடுக்கிய மூலை
தொடர் போராட்டக் காவிரி
கருநாடக அரசின் மெத்தன போக்கால்
தமிழக விவசாயிகளுக்கு கைவிரி
தெருவில் கையேந்தும் யானை
மிருகவதை சட்ட மதிக்கத்தவறிய பாகனின்
தலையில் உடைத்தது பானை
ஏழ்மையில் வாங்கிய வட்டி
கட்டத் தவறிய நாட்களில்
தினம் போடுவது குட்டி
கிராமம் போனான் சென்னைவாசி
திரைப்பட நடிகைகளின் முகவரி கேட்டறிந்து
நெளிந்து மகிழ்ந்தான் திண்ணைவாசி
புறாவிற்கு குறிவைத்தான் நாணில்
சிறிய கட்டெறும்பு கடியில் தவறி
சீறிப் பாய்ந்தது வானில்
|
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. படைப்புகளை அனுப்பும்போது தாங்கள் பயன்படுத்திய எழுத்துரு எதுவென்பதைத் தெரியப்படுத்தவும்.
|
Keetru | Tamil | Tamilnadu | Literature | Cinema | Recipe | Joke
|
|
 |
|