James Hackett- ஹைகூக்கள் தமிழில் : பொன். குமார்
சூரியனின் கடுங்காற்றுடன்
தங்கநிற ஒளிவட்டத்தின் கீழ்
சுற்றுகிறது பருந்து.
நத்தை தன் வழியில் ஊரலாம்
ஆனால் பார்; வெள்ளியில் எப்படி கட்டியுள்ளது
ஒவ்வொரு கணமும் நகர்கையில்
பட்டுப்பூச்சியின் ஒளி
உன்னத மௌனத்திற்குள்ளே படிகிறது
மலர் மீது
குவிந்த இலைகளுக்கிடையே
சுழல்காற்று மேலேழுந்து
வானத்தை நிச்சயம் அடையும்
எலிபிடிக்கும் பூனை
ஈக்களிடம் கருணையில்லா விட்டாலும்
தேனீயைக் கண்டு கண்சிமிட்டுகிறது.
வசந்தம் பாடும் பறவை பாடுகிறது
அபரிமிதத்துடன்
சில நேரங்களில் அதன் இறகுகளை விரிக்கிறது.
|
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. படைப்புகளை அனுப்பும்போது தாங்கள் பயன்படுத்திய எழுத்துரு எதுவென்பதைத் தெரியப்படுத்தவும்.
|
Keetru | Tamil | Tamilnadu | Literature | Cinema | Recipe | Joke
|
|
 |
|