Keetru
இலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் தகவல் களம் சிரிப்'பூ'
Font problem?
Keetru Ani
Ani Logo

இணைய இதழ்கள் :ஒரு அறிமுகம்

அந்தந்த காலக்கட்டத்திற்கு ஏற்ப எல்லாக் கலைகளும் தங்களுக்கான புது வடிவங்களையும் வெளியீட்டு யுத்திகளையும் உள்வாங்கிக் கொண்டுள்ளன.

சாட்டிலைட் தொலைக்காட்சிகள் மிகப்பெரிய மற்றும் துரித செய்தி ஊடகமாக வளர்ந்துள்ளது. அதற்கு இணையாகவோ தாண்டியோ அசுரத்தனமான வளர்ச்சி கண்டுள்ளன இணையத் தளங்கள்.

அச்சு வடிவத்தில் இன்று உலகெங்கும் கோடிக் கணக்கில் ஏடுகளும், இதழ்களும் வெளிவந்தாலும் இணையத் தளங்களில் அதன் அழகும் சௌகரியமும் தனி. ஒப்பிடுகையில் மின்னிதழ்கள் சிறப்பானவையும்கூட.

இலக்கியத்திற்காக எத்தனையோ இதழ்களை நாம் இணையத் தளங்களில் காணமுடிகிறது. அவற்றுள் பல சிறிது காலம் இயங்கி விட்டு பின் விட்ட இடத்திலேயே தேங்கி விடுகிறது. முகப்பு பக்கத்தை தவிர வேறு இணைப்புகள் இல்லாமல் எத்தனையோ தளங்கள் உள்ளன.

அந்திமழை. காம் மின்னிதழ் கதம்பமாய் பல விஷயங்களை உள்ளடக்கிக் கொண்டுள்ளது. இலக்கியத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் இத்தளத்தில் இன்னும் பலப்பல ஆவணச் சரக்குகள் கொட்டிக் கிடக்கின்றன.

திரு. இளங்கோவன் தனது துணைவியார் சரஸ்வதி மற்றும் சில நண்பர்களின் உதவியோடு இந்தத் தளத்தை நடத்தி வருகிறார்.

கவிதை, சிறுகதை, கட்டுரை, விவாதம், விமர்சனம், குடில்கள், பேட்டிகள் என வகை வகையாய் வண்ண காட்டி விரிகிறது இத்தளம்.

தினமும் புதுமுகம் காட்டும் அந்திமழையில் கவிதைத் துளிகள் குறிப்பிடுபடியான ஒரு பகுதி. கவிதைக்கேற்ற புகைப் படங்களையும் இணைத்து அழகு படுத்தி வழங்குகிறார்கள். முகங்கள் பகுதியில் பிரபலங்களின் வரலாறு அவர்தம் வாழ்வின் முக்கிய நிகழ்வுகளும் எழுதப் பட்டுள்ளன. அவசர உலகில் விவாவரியான செய்திகளை வாசிக்க யாருக்கும் பொழுது இல்லா நிலையில் சுருக்கமாக முக்கியச் செய்திகளை வழங்குகிறது. இத்தளம் TIT BITS என்றப் பகுதியில் தமிழக பிரபலங்கள் தற்போது என்ன செய்து கொண்டிருக்கின்றன என்று கொறிப்பதாக குட்டித் தகவல்கள். தமிழ் இலக்கியச் பகுதியில் சிற்றிதழ்களை தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறார்கள். இதுவரை சுமார் 35 தமிழ்ச் சிற்றிதழ்கள் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளன.

ஆங்கிலப் பகுதியில் தன்னம்பிக்கை, சுயமுன்னேற்றம், நகைச்சுவை என பிரபலங்களின் கட்டுரைகள் சிறப்பான ஒன்று. சேவைப் பகுதிகளும் குறிப்பிடும் படியானதுதான். எடிட்டர் சாய்ஸ் என்றப் பகுதியில் இந்தத் தளத்தின் ஆசிரியர் குழு தங்களுக்கு பிடித்த வாசகர்கள் படித்து மகிழும் படியான Blogகளை அறிமுகப் படுத்துகின்றனர்.

எல்லோரும் கண்டு களிக்க புகைப் பட பகுதிகளும் உண்டு. விரைவில் சினிமா குறித்த பகுதியும் வரப்போவதாக செய்தி.

தினம், வாரம் என புதுப்புது பகுதிகள் அறிமுகப் படுத்தப்பட்டு அவை குறித்த காலத்தில் புதுப்பிக்கப்படுவது பாராட்டத்தகும் ஒன்று. சமீபமாக கவிதைக் திருவிழா, மொழி பெயர்ப்பு கதைகள் பொன்றவை புதுப்பகுதிகள்

யோசிக்க வைக்கும் இம்மின்னிதழை வாசிக்க

இணைய முகவரி: WWW.andhimazhai.com
மின்னஞ்சல்: admin@andhimazhai.com



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. படைப்புகளை அனுப்பும்போது தாங்கள் பயன்படுத்திய எழுத்துரு எதுவென்பதைத் தெரியப்படுத்தவும்.


கீற்றுவில் தேட

Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.puthiyakaatru.keetru.com

www.koottanchoru.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

www.anicha.keetru.com

www.anaruna.keetru.com

www.thaagam.keetru.com

www.dheemtharikida.com

www.noolagam.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.kathaisolli.keetru.com

www.kuthiraiveeran.keetru.com

www.ani.keetru.com

www.puthuezhuthu.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.bank.keetru.com

www.thamizharonline.com

www.punnagai.keetru.com

www.puthiyathendral.keetru.com

www.vanam.keetru.com

www.vizhi.keetru.com

www.kanavu.keetru.com

www.inmai.keetru.com

www.sancharam.keetru.com

www.kannottam.keetru.com

www.neythal.keetru.com

http://uthappuram.keetru.com/

About Us | Terms & Conditions | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com
Hosted & Maintained by india intellect
Best viewed in Windows 2000/XP