Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ani
Ani Logo

உலகக் கவிஞர்கள் வரிசை
மைக்கேல் கோப்

மைக்கேல் கோப் தென் ஆப்பிரிக்காவின் கேப்டவுனில் 1952ம் ஆண்டு பிறந்தார். இவரது தந்தை பிரபல நாவல் எழுத்தாளர் ஜாக் கோப். மைக்கேல் கோப் கவிஞனராக மட்டுமல்லாமல் எழுத்தாளராகவும் நகை வடிவமைப்பாளராகவும் அறியப்படுக்கிறது.

இவர் Spiral of Fire என்ற நாவலையும் Scene and Visions என்ற முழு கவிதைத் தொகுதியும் பல கவிதை சிறு வெளியீட்டுகளையும் வெளியிட்டு உள்ளார். இவரது அதிகப்படியான படைப்புகள் இணைய தளத்தில் காணக் கிடைக்கிறது. Ghaap, Sonnets from the Northern cape போன்ற நூல்கள் வெளிவர இருக்கின்றன. இவர் சிறப்பான கவிதை நிகழ்த்துபவராக அறியப்படுகிறார். பிரபல இசை மேதை கிறிஸ் வைல்ட்மேனுடன் இணைந்து ஜாஜ் மற்றும் கவிதை கலந்த குறுந்தகடுகளை வெளியிட்டுள்ளார்.

மைக்கேல் கோப்பின் கவிதைகளில் உருவம், மனிதர்கள் மற்றும் பல்வேறு கதைகள் வெளிப்படுகிறது. இவரது கவிதை நிகழ்ச்சிகள் பெரிய கொண்டாட்டமாக கருதப்படுகிறது. உலக வாழ்வின் நுண்நொடிக் கழிதலை அவர் கவிதையுள் மிகச் சிறப்பாய் சிறை செய்கிறார் என வர்ணைக்கு உட்படுகிறது அவரும் அவரது கவிதையும், உலகமயமாதல் மற்றும் பொருளாதாரம் அமைப்பியல் குறித்த விமர்சனங்களை தனது படைப்புகளில் பதிவு செய்து உள்ளார்.

மைக்கேல் கோப்பின் கவிதைகள் ஊடாக சுற்றுச்சூழல், சமூக மற்று மதரீதியான தளங்களையும் பலவகை மக்களின் குரல்களையும் இனங்களின் எண்ணப் பதிவுகளையும் ஒருவரால் கண்டு உணர முடியும்.

தேனீர் விருந்து என்று பொருள்படும் கவிதை ஒன்றில் தேனீர் குடிப்பதால் உண்டாகும் உற்சாகம் மற்றும் சமூக மற்றும் சுற்றுச் சூழல் உறவுகளை இந்த சாதாரண நிகழ்வால் வெளிப்படுத்துகிறார். மேலும் `சோடா டிரிங்க்' என்ற கவிதையிலும் உலகமயமாக்கல் பிரச்சனையை வெளிப்படுத்தி உள்ளார்.

`பில்ஹார்ஜிய பூக்' என்ற கவிதையில் குழந்தைகளுக்கு தடுப்பு ஊசிகள் போடுவதை நகைச்சுவையாக வெளிப்படுத்தி உள்ளார். மேலும் தென் ஆப்ரிக்காவின் வறுமையையும் உணவுப் பற்றாக் குறையையும் சுட்டிக் காட்டி உள்ளார்.

`த வயலின் மேக்கர் ' மற்றும் `மேக்ஸ் ரைய்ஸ்மேன்' போன்ற கவிதைகளில் கலைஞர்களின் கோப்பின் கவிதைகளில் பல வகையான சத்தங்களும் பலதரப்பட்ட மக்களின் பேச்சொலியும் பதிவு செய்து உள்ளார். இறுதியாக அமைதியின் உதாரணங்களை எங்கும் எதிலும் காண்பதால் `த எக்சாம்பல்ஸ் ஆப் சைலன்ஸ்' என்ற கவிதையில் எழுதி உள்ளார்.


அமைதியின் சில உதாரணங்கள்

இதுதான் அமைதி
பறவைகளின் கூச்சலாலும்
சாலையின் சத்தத்தாலும் நிரம்பியது
பழைய வீட்டின் கீரிச்சிடும் ஓசைக் கீற்றுகளாலும்

இந்த அமைதி
இருளில் அமிழ்ந்து ஆழ்ந்து தூங்குகிறது
கருமையின் துளிகூட இங்கில்லை

இந்த அமைதியில்
கரையில் தவழும் அழைகள்
கடலில் நிறைந்த மீன்களும், சீல்களும்
துல்லியமான வாழ்வும்
சுழன்று கிடக்கும் மணல் பரப்பு

இது இதயத்தின் அமைதி
உடலுக்குள் உணர்வின்றி ஒலிக்கும்
வால்வுகள் திறந்து மூடுகிறது
நுரையீரல் காற்றை வாங்குகிறது விடுகிறது

இது வனாந்திர அமைதி
இதில் முக்கோடி செல் அமைப்புகள்
ஊட்டமளிக்கவும் இயங்கி இருக்கவும்

இந்த அமைதி
ஆதித்தாயின் அமைதி தண்னென்ற பளிங்கில்
பழைமை சிரசம் திரும்பிய படி
கைகள் காட்டும் உறைந்த மாமிசம்

இந்த அமைதி
உறங்கும் மற்றவர்களின் அமைதி
உறங்கா இரவுகளின் தகித்துத் திரும்பும்
உடலின் அமைதி

இந்த அமைதி
வார்த்தைகளில்லா அமைதி பேசாதவர்களின்
பேச முடியாதவர்களின் பேச மறுப்பவர்களின்
வார்த்தைகள் மறுக்கப்பட்டவர்களின்
சத்தங்கள் சத்தங்கள்

இது கைகளின் அமைதி
கருவிகளை பிடித்த கைகள் உணவை ஏந்திய கைகள்
வெற்றுக் கைகள் கைகளைப் பற்றியக் கைகள்
ஆயுதங்களை ஏந்தியக் கைகளின் அமைதி
ஆயுதங்களைக் கண்டு மட்டும் உயர்த்தப்பட்ட
கைகளின் அமைதி

இது வெறுமையின் அமைதி
அங்கு பொருட்கள் விரவி கலக்கிறது
இயற்கை உலகின் அமைதி
அழாத, அழுகின்ற மழலைகளின் அமைதி

இது முடிவின் அமைதி
துவக்கத்தின் அமைதி
மழை பொழிதலின் தாவரம் வளர்தலின்
வேலையின் அமைதி மாசு விழுங்கியின் அமைதி

தொகுப்பு : பாலைவனத்தை கடக்கையில்



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com