வெறிச்சோடிக் கிடக்கும் வீடு மதியழகன் சுப்பையா
‘எப்பமா ஊருக்குப்
போவான்?
எப்பம் பார்த்தாலும்
புலுபுலுன்னுகிட்டு
பன்னி பனஞ்சோறு
திண்ணாப்புல திங்குறான்
டிவிச் சானல
மாத்தத் தெரியல
ஒரு ஆளுகீளு வந்தா
நாகரீகமா நடந்துகிறானா
சட்டையக் கழத்திட்டு
ஊரு பூரா சுத்திவர்றான்
கால விரிச்சு
குறட்ட விட்டபடி
வாயப் பொளந்து
தூங்குறான்
யம்மோ, யக்கா,
தாய்யின்னு கூப்பிட்டுகிட்டு
அவனப் பார்த்தாலே
பத்திக்கிட்டு வருது'
இப்பொழுது எல்லோரும்
புலம்புகிறோம்
ச்சே! முருகண்ணேன்
ஊருக்குப் போனதுக்கப்புறம்
வெறிச்சோடி கிடக்குல
வீடு.
|
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. படைப்புகளை அனுப்பும்போது தாங்கள் பயன்படுத்திய எழுத்துரு எதுவென்பதைத் தெரியப்படுத்தவும்.
|
Keetru | Tamil | Tamilnadu | Literature | Cinema | Recipe | Joke
|
|
 |
|