கலாமுக்கு வந்த காதல் கடிதம் சோலை. இசைக்குயில்
செல்வன் கலாமுக்கு
செல்வியாகிய இல்லாதவளின் காதல் கடிதம்
காதல் தோல்வியில்
கல்யாணம் மறுத்தீரா?
வெளிப்பட்டுவிடும் என்பதால்
தாடிக்குப் பதில்
தலைமுடி வளர்த்தீரா?
விமானப்படை
பதவிக்கு விண்ணப்பித்து
தோற்றவர்க்கு
முப்படைத் தலைவர் பதவி
தேடி வந்தது.
காதலில் தோற்றாலும்
வயதானபின்
உன்னை பராமரிக்கும்
பதவி கிடைக்கும் எனக்கு
அதற்கு முன்
என் காதலை
ஏற்காவிட்டாலும்
தோற்ற காதலை மறைக்க
ஓரு மார்க்கம் சொல்லுங்கள்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. படைப்புகளை அனுப்பும்போது தாங்கள் பயன்படுத்திய எழுத்துரு எதுவென்பதைத் தெரியப்படுத்தவும்.
|
|