கசியும் ஈரம் பாரதி கிருஷ்ணன்
வேதனைகளின்
கானல் பொழுதுகளில்
உன் முத்தத்தில்
கசியும் ஈரத்தில்
மனதுக்குள்
சாரல் அடிக்கும்...
முக்கியமாக
எழுதிக் கொண்டிருக்கையில்
தீர்ந்து விடும்
உன் வாழ்க்கையின்
முக்கிய நேரத்தில்
உன் மூச்சை
நிறுத்தியதேனோ
நெஞ்சில் விழுந்த
துக்கம்
கால் முளைத்து
வெளியேறியது
கண் வழியாக....
நீ
இறுதியாக
சொல்ல வந்த வார்த்தைகளை
திருடிப் போன
காற்றைத்
தேடித்தேடி களைக்கிறேன் !
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. படைப்புகளை அனுப்பும்போது தாங்கள் பயன்படுத்திய எழுத்துரு எதுவென்பதைத் தெரியப்படுத்தவும்.
|
|