Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ani
Ani Logo


தொடங்கும் கவிதைப் பயணம்

தமிழ்க் கவிதைகளை உலகக் கவிதைகளின் திசைகளுக்கு இணையாக நகர்த்தும் முயற்சியில், மும்பையிலிருந்து தன் தமிழ்ப்பணியைத் தொடங்கும் ‘அணி' தன்னையும் இணைத்துக் கொள்கிறது.

அணி

ஆசிரியரணி
அன்பாதவன்
மதியழகன் சுப்பையா

தனி இதழ்: ரூ.10

தொடர்பு முகவரி
Ani - Bimonthly
Madhiyalagan Subbiah,
10/1 - B, Trivedi & Desai Chawl,
D'Monte Lane,
Orlem, Malad (west).
Mumbai - 400 064

Mobile: 09821847464
Res: 022 - 32580618
Email: [email protected]

கவிதை, மொழிபெயர்ப்பு, ஹைகூ, லிமரைக்கூ, சென்ரியூ, ஹைபுன், உரைநடைக்கவிதை, கவிதை குறித்த கட்டுரைகள் மற்றும் விமர்சனங்கள் எனக் கவிதையும் கவிதை சார்ந்தும் இயங்க யத்தனிக்கும் ‘அணி' தமிழ்க்கூறும் நல்லுலகின் அனைத்துப் படைப்பாளிகளையும் அன்போடு வரவேற்க்கிறது.

கலை மக்களுக்காகவா அன்றி கலைக்காக மட்டுமேவா என்ற விவாதங்களைத் தாண்டி தமிழின் மரபையும், நவீன சிந்தனைப் போக்கையும் இணைக்கும் பாலமாக அணி செயல்பட விரும்புகிறது. படைப்பாளிகளின் பங்களிப்பின்றி இந்தக் கவிதைப் பயணம் சாத்தியமில்லை. எனவே, மரபு, நவீனம் தொடங்கி ஹைகூ வரைக்கும் அனைத்தையும் எழுதுங்கள்; அதே நேரம் தரமாய் எழுதுங்கள் ‘அணி' அனைத்துப் படைப்பாளிகளுக்குமான சங்கப்பலகை. தமிழ் இலக்கியத்தின் எந்த அணியையும் சாராத, கவிதை வளர்ச்சி ஒன்றையேக் குறிக்கோளாய்க் கொண்டது நமது ‘அணி'. அன்பாதவனும், மதியழகனும் துடுப்பு வலிக்க தொடகுகஞிஞூம் நமது கவிதைப் படகீப் பயணம்.

‘அணி'யை நண்பர்களிடத்தில் அறிமுகம் செய்யுங்கள்; தங்களிடமிருந்தும் நண்பர்களிடமிருந்தும் தரமான படைப்புகளையும், இயன்ற நன்கொடையையும் எதிர்நோக்குகிறோம்.

நன்கொடைக்கு ஈடானப் பிரதிகள் அனுப்பி வைக்கப்படும். எங்களின் அன்பான வேண்டுகோளுக்கிணங்க ‘பொற்குவை' வழங்கிய நன்னெஞ்சங்களுக்கு நன்றிப் பதிவுகள்.

‘அணி'யின் வருகை குறித்து மூத்தக் கலைஞர்களின் வாழ்த்துக்களும், சமகாலப் படைப்பாளிகளின் ஆதரவும் மிகுந்த நம்பிக்கையைத் விதைக்கின்றன. இதே உத்வேகத்தோடு ஒவ்வொரு இதழையும் கொண்டு வருவோம் என்ற உறுதியையும் இங்கு பதிவு செய்கிறோம்.


அம்ரிதா ப்ரிதம் கவிதைகள்

1. நம்பிக்கை

கருத்த அசிங்கமான வதந்தி ஒன்று
நுழைந்தது என் அறைக்குள்
வவ்வாலைப் போல்

சுவர்களில் மோதுகிறது
பொந்துகள் தேடி
கவறைக் குடைந்து
துளைகள் செய்கிறது

ஆனால், எனது கருத்த விழிப்பாதைகளை
இரு கைகளால் மூடிக் கொண்டேன்

உன் காதலின் பஞ்சினை
காதுக்குள் நுழைத்து வைத்தேன்.



2. கன்னிமை

உனது படுக்கையில் வரும்போது
நான் தனியாக இல்லை
நாங்கள் இருவர் இருந்தோம்

திருமணமான ஒருத்தி
கன்னிமையுடன் ஒருத்தி
உன்னுடன் படுக்க இருந்தனர்

என்னிடமிருந்த கன்னிமையை
உனக்குத் தர இருந்தேன்
அப்படியே செய்தேன்

இந்தக் கொலை
சட்டப்படி சரியானதும் கூட
இது கேவலமானது இல்லை

இந்த அவமானம் எனக்கு
சலித்து போய் விட்டது

அடுத்த நாள் காலை
ரத்தகறை படிந்த
என் கைகளைப் பார்த்தேன்
அவற்றைக் கழுவினேன்.

கண்ணாடிக்கு முன்
நின்ற பொழுதில்
அவளையும் அங்கு
நிற்பதைக் கண்டேன்

நேற்று இரவு
யாரைக் கொன்றதாக
நினைத்திருக்கிறேனோ
அவளைக் கண்டேன்

ஓ ! கடவுளே !
உனது படுக்கையில்

ஏன் அத்தனை
அடர்ந்த இருள்
கொல்ல நினைத்தது ஒன்றை
கொன்று விட்டது மற்றொன்றை

ஆங்கிலம் வழி தமிழில்: சு.பா.ஆனந்த செல்வி

சமீபத்தில் இயற்கை எய்திய பசிசாபி கவிஞர் ‘அம்ரிதா ப்ரிதம்' அவர்களுக்கு படைப்பாளிகளின் சார்பாக அணி தனது அஞ்சலியை பதிவு செய்கிறது.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com