Keetru
இலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் தகவல் களம் சிரிப்'பூ'
Font problem?
Keetru Ani
Ani Logo

ஹைபுன்கள்
ந.க.துறைவன்

ஞாபக மறதி மூளையின் இரசாயனக் குறைபாடு காரணமாக ஏற்படுகின்றன என்று கூறுகிறது மருத்துவ விஞ்ஞானம். ஒரு மனிதனின் ஞாபக மறதி போல, பல்வேறு தன்மைகளில் செயல்படுகின்றன. ஞாபக மறதி விஞ்ஞானிகளையும் விட்டு வைக்கவில்லை.

ஞாபக மறதியால் எத்தனையோ பேரிழப்புகள் நிகழ்ந்துள்ளன. அதைச் சொல்லி மாளாது.

“நா உங்கக் கிட்ட சொன்னச் சமாச்சாரம் என்னவாச்சி'' என்று விநயமாகக் கேட்டேன்

“அதுவா, சார். மறந்தே போச்சி'' என்று ரொம்ப யதார்த்தமாகச் சொன்னார். இப்படியிருக்கிறது ஞாபக மறதியின் போக்கு.

எப்படியிருக்கும் உலகம்?
உதிக்க மறந்து விட்டேன் என்று
சூரியன் சொன்னால்...!


தொலைபேசியில் பேசுவது என்பது ஒரு கலை. குறைந்த வார்த்தைகளில் நிறைவாகப் பேசி செய்திகள் பரிமாறிக் கொள்வது இதன் மையச்சிறப்பு. என்ன பேச வேண்டும்? எதை பேச வேண்டும்? எப்படி பேச வேண்டும்? என்ற வரையறையை யாரும் பின்பற்றுவதில்லை. இப்பொழுது, அலைபேசி வேகமாகப் பரவி வருகிறது. பஸ், ரயில், கார் ஸ்கூட்டர், விமானம், பயணத்தின் போது பேசுவதைப் பார்க்க முடிகிறது. பாதையில் நின்று பேசுவதையும் வேடிக்கைப் பார்க்க முடிகிறது. நிர்வாகப் பணிகள் முதல் வியாபாரிகள் வளர்ச்சி வரையும், உலகமெங்கும் நகரங்கள் முதல் கிராமங்கள் வரையும் இணைத்து உள்ளங் கைக்குள் சுருக்கி வைத்து விட்டது விஞ்ஞான தொழில் நுட்பம்.

மலைப்பாகப் போகிறார்கள்
வாங்கி வைத்திருப்போர்
உள்ளங்கையில் அலை பேசி


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. படைப்புகளை அனுப்பும்போது தாங்கள் பயன்படுத்திய எழுத்துரு எதுவென்பதைத் தெரியப்படுத்தவும்.


கீற்றுவில் தேட

Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.puthiyakaatru.keetru.com

www.koottanchoru.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

www.anicha.keetru.com

www.anaruna.keetru.com

www.thaagam.keetru.com

www.dheemtharikida.com

www.noolagam.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.kathaisolli.keetru.com

www.kuthiraiveeran.keetru.com

www.ani.keetru.com

www.puthuezhuthu.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.bank.keetru.com

www.thamizharonline.com

www.punnagai.keetru.com

www.puthiyathendral.keetru.com

www.vanam.keetru.com

www.vizhi.keetru.com

www.kanavu.keetru.com

www.inmai.keetru.com

www.sancharam.keetru.com

www.kannottam.keetru.com

www.neythal.keetru.com

http://uthappuram.keetru.com/

About Us | Terms & Conditions | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com
Hosted & Maintained by india intellect
Best viewed in Windows 2000/XP