பாச நெருப்பின் பசி
பட்டி செங்குட்டுவன்
பூனா சந்திப்பு
சலவைக்கல் பதித்த
சயன அறையென
பயணிகள் கூட்டம்!
எம்மொடு கிளம்பி
இலவசமாக வந்தவர்களை
எதிர்பார்த்து, எதிர்பார்த்து
இரண்டு நாள் கிடந்தோம்!
எடை மிஷினில் ரூபாபோட
ஹேமமாலினி சிரித்தாள்
நீச்சல் உடையில்!
துணை வந்த மனிதருக்குள்
உறங்கிய வேகம்
ஆடிக்காற்றில் மரமாச்சு!
""ஒன்னால தான்யா இப்படி
நல்லதோ கெட்டதோ
இன்பமோ துன்பமோ
ஒண்ணா இருந்தோமே!
ஆளுக்கொரு திக்கா
அரிச்சந்திரன் கதையாச்சே''
பாயும் மனைவி நேசம்
நற நறக்கும் பற்கள்!
கழுத்தை திருகிவிட
புடைக்கும் விரல் நரம்புகள்!
கட்டுச் சோறும் கெட்டுப்போக
சகுனத்தால் ஆற்றாத அழுகை
அடுத்தவாரம் சபர்மதி
டி.பி. யார்டுக்கு
அவர்கள் வரும் வரை
துடிக்கும்! வெடிக்கும்!
தகிக்கும்!
பாச நெருப்பின் பாடுகள்
அப்போது புரியாதெனக்கு!
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|