துரோகத்தின் குத்துவாள் நீலி
முன்னேறிப் போகிறோம்
எப்போதும் என்றில்லா விட்டாலும்...
சோற்றுத் துணுக்குகளின்
வாசம் முகர்ந்து
பகுத்தறிவின் மமதையில்
இளைப்பாறி
தற்காலிக வெற்றியின்
போதையில்
சிலர் சிலராய்
சிதறடிக்கப்பட்ட போதிலும்
முன்னேறிப் போகிறோம்
எல்லோரும் என்றில்லாவிட்டாலும்
துரோகத்தின் குத்துவாள்
முதுகை குறித் தாக்க
வெற்றியின் அடிச் சுவடே
புலப்படாதிருக்க
ஆறாக்காயத்தின் வெப்பம்
தழும்பாகும் முன்னே
மீண்டும் மீண்டும் என
காயங்கள் ஏற்று
முன்னேறிப் போகிறோம்.
இப்போதும் சிலரேனும் ...
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. படைப்புகளை அனுப்பும்போது தாங்கள் பயன்படுத்திய எழுத்துரு எதுவென்பதைத் தெரியப்படுத்தவும்.
|
|