Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ani
Ani Logo

இணைய இதழ்கள்: ஒரு அறிமுகம்
keetru.com

இந்தியாவின் வேற்று மாநிலத்தில் எங்கேனும் தமிழ்க் குரல் கேட்டால் உற்சாகமடைகிறது உள்ளம். பிழைப்புக்காக வேறு மாநகரம் நோக்கி நகர்ந்த தமிழர்கள், வெளிநாடுகள் பறந்த தமிழர்களின் தணியாத ஆசையாய் தமிழும் தமிழ் சார்ந்த இயக்கங்களுமே பிரதானமாய் இருக்கிறது. தமிழ்ச் சங்கங்கள், சஞ்சிகைகள் என வெளுத்துக் கட்டுகிறார்கள். அதே போல் கணிணியின் தேடல் பொறிகளில் "தமிழ்" எனப் போட்டுத் தேடுகையில் அடுக்கப்பட்டிருக்கும் வலைத்தலங்களைக் கண்டால் மனதுக்குள் கச்சேரி மேளந்தான்.

எங்கு போனாலும் இலக்கியம் படிக்கவும் படைக்கவும் என ஒன்று திரளும் தமிழ் மக்கள் கூட்டம் பாராட்டுதலுக்குரியது. எனது கவனிப்பிலும் என் பறவை மூளையின் ஆய்வின் படியும் இந்திய மொழிகளில் தமிழுக்குத்தான் அதிக இணைய தளங்கள் உள்ளன. இவ்வாறான இணையத் தளக் கூட்டத்தில் வேரூன்றி இளந்ததளிர் கீற்று பரப்பி உள்ளது, கீற்று.காம் என்னும் தமிழ் இலக்கிய இணைய தளம்.

இலக்கியம் மட்டுமல்லாமல் நளபாகம் (சமையல்), சிரிப்பூ, (ஜோக்குகள்) மருத்துவம் திரைவிருந்து, சிற்றிதழ்கள் மற்றும் தகவல் களம் என ஒரே மேடையில் பல கீற்றுகளை வளர்த்துள்ளது.

தினமும் புதிய படைப்புகளை ஏற்றும் இத்தளம் பசுமையோடு இதமளிக்கிறது. பல தளங்களில் இணைய மின் சஞ்சிகைகளின் இணைப்பு கொடுக்கப்பட்டிருந்தாலும் கீற்று தளம் தமிழகத்தின் முக்கிய சிற்றிதழ்களை தன்னுள் இணைத்துக் கொண்டுள்ளது. சிற்றிதழ்கள் வெளியாகும் சமயம் அவற்றை இணையத்தில் வாசிக்கும் வசதியான வாய்ப்பை நமக்கு கொடுத்திருக்கும் கீற்றின் பணிக்கு ஈடு இதுவேயின்றி வேறெதுவாக முடியும். உன்னதம், உங்கள் நூலகம், புதிய காற்று, தலித் முரசு, பெரியார் முழக்கம் அனிச்ச, புது விசை, தாகம், செய்தி மடல், விழிப்புணர்வு, கவிதாசரண் மற்றும் சமீபமாய் இணைந்த தீம்தரிகிட ஆகிய இதழ்கள் இந்த இணைய மட்டையில் துளிர்த்து பச்சை மனம் வீசும் கீற்றுகள். விரைவில் உங்கள் "அணி” யும் இந்த வரிசையில் சேர்ந்து அணி வகுக்கும்.

மேலும் தமிழக ஏடுகளில் வெளியாகும் முக்கிய கட்டுரைகள், எழுத்தாளர்களின் சூடான படைப்புகள் மற்றும் விவாதங்கள், கவிதைகள் என அடர்த்தியாகி கிடக்கிறது இந்தத் தளம்.

கீற்று இணைய தளத்தினை பராமரிப்பவர்களின் அதிவேகமும் சுறுசுறுப்பும் பாராட்டுதலுக்குரியது. திரைப்பட பகுதிகளில் கவர்ச்சிப் படங்களை தவிர்த்து செய்திகளை மட்டும் வெளியிட்டு வருகின்றனர், பெரும்பாலான இணைய தளங்களைப் போல் வாசகர்களைக் கவர சினிமா கவர்ச்சிப் படங்களை அதிவெளிச்சம் போட்டுக் காட்டும் அவசியம் இவர்களுக்கு இல்லை. இதுவே கீற்று இணையத்தளத்தின் வெற்றி.

தகவல் களம் பகுதியில் பொது அறிவு துணுக்குகளை சுருக்கமாக தந்துள்ளார்கள். படைப்புகளுக்கான படங்களையும் ஓவியங்களையும் பொருந்த தேர்ந்து கொள்வதையும் குறிப்பிடாமல் இருக்க முடியாதுதான்.

மற்ற தளங்களில் விளம்பரங்களுக்கு இடையில் படைப்புகள் இருக்க காண்கிறோம். இத்தளத்தில் படைப்புகளுக்கே பிரதான ஸ்தானம்.

படைப்பாளிகளிடமிருந்து படைப்புகளை வாங்கிக் கொள்வதும் அவற்றை வெளியிட்டதும் மின்னஞ்சல் மூலம் தகவல் தெரிவிப்பதும் என கடைமையாற்றுகிறார்கள். புதிய பகுதியோ அல்லது இதழோ இணைக்கப்பட்டால் தொடர்பில் இருக்கும் அனைவருக்கும் தகவல் தருவது கீற்று குறித்த சிறப்பு தகவல்.

இன்னும் பல பசுமை பக்கங்களையும் நல்ல பல சிற்றிதழ்களையும் கீற்று அறிமுகப்படுத்தும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பு. வாசகர்கள் வாழ்த்து நீரையும் படைப்பாளர்கள் தங்கள் படைப்பு உரத்தையும் வழங்கி கீற்றுக்கு ஆதரவு தருவோம்.

இணையம் : www.keetru.com
மின்னஞ்சல் : [email protected]


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com