மாற்றம்
வெ.கலிவரதன்
தோட்டத்துப், பாத்தியில்
வேர் விடும் விதை கிளப்பிய
மண் கேடு...
வைக்கோல் கன்றுக்காய்
குரல் கொடுக்கும்
மடி சுரந்த தாய்ப் பசு...
கோடையை விரட்ட
குச்சி ஐஸ் விற்கும் வண்டிக் காரனைச்
சுடும் வெயில்....
சுள்ளிப் பொறுக்கச் சென்று
வாழ்வொடிந்த
மலை நாட்டுத் தங்கையர்கள்....
மக்களை மயக்கி
சோம்பேறிகளாக்கும்
இலவச நலப் பணித் திட்டங்கள்...
ஆளுயர அரசியல் போஸ்டர் ஒட்டியபின்
பசி நீங்க கைப்பசை நக்கும்
உழைப்பாளி...
நரம்பு திரண்டெழுந்து கிழடு தட்டியும்
காதலைப் பாடும்
காமப் பட கவிகள்..
மருத்துவமனையில்
பேரனைப் பார்க்கக் கையேந்தும் பாட்டி
காவலாளிக்கு மாமூல்...
என்றும் மாறா நிகழ்வுடன்
மாறிக் கொண்டுதானிருக்கிறது
நாடு...
|
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. படைப்புகளை அனுப்பும்போது தாங்கள் பயன்படுத்திய எழுத்துரு எதுவென்பதைத் தெரியப்படுத்தவும்.
|
Keetru | Tamil | Tamilnadu | Literature | Cinema | Recipe | Joke
|
|
 |
|