Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru Logo "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Ani
Ani Logo

தலையங்கம்

ருசி பல வென்றுணர் - பாரதி

அணியின் முதலிதழ் குறித்து தடம் பதித்த மூத்தப் படைப்பாளிகள் தொடங்கி வளரும் கவிஞர்கள் வரையிலான, ஆதரவும், விமர்சனங்களும், ஆலோசனைகளும் மிக்க மகிழ்வைத் தருகின்றன. இந்த ஆதரவு, உற்சாகத்தோடு அணியைத் தொடர்ந்து இயங்க உத்வேகப் படுத்தும்.

‘அணி'யின் Logo எழுத்து குறித்து கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டோம். ‘ஹிந்தி பேசும் பகுதியிலிருந்த வெளிவரும் தமிழ் இலக்கிய இதழ்' என்பதன் குறியீடு மற்றுமின்றி கொஞ்சம் வித்யாசம் இருக்கட்டுமே என்கிற Creative ஆவலும் காரணம். தமிழ் அழியாமல் காக்கப் பலரும் கடுமையான பக்தியுடன் இருப்பதைப் பார்க்கிறபோது ‘தேன் வந்து பாயுது காதினிலே!'.

கவிஞர் சிற்பி விருது பெரும் கவிஞர்கள் வ.ஐ.ச ஜெயபாலன், புதியமாதவி, கடற்கரய் மூவர்க்கும் ‘அணி' யின் வாழ்த்துக்கள்.

மணிக்கொடி எழுத்தாளர் ‘சிட்டி', உவமைக் கவிஞர் ‘சுரதா' ஆகிய மூத்த படைப்பாளிகளுக்கு மறைவுக்கு அணியின் அஞ்சலி.

சில, பல நண்பர்கள் எங்களைப் புரிந்து இயன்ற நன்கொடை வழங்கியதில் மகிழ்ச்சி ஆனாலும் நெருடலாக இருப்பது ஒரு விஷயம். ஒருவர் 2 மாதங்களுக்கொரு முறை 50ரூபாய் நன்கொடை செலவு செய்து 57 பிரதிகள் வாங்கி நண்பர்களுக்கு அளிக்கலாம் தானே! ஒரு தேநீர் 5 ரூபாய்... ஒரு சிகரெட். குறைந்தபட்சம் 2.75 ரூபாய். ஒரு ஸ்டிக்கர் பொட்டு அட்டை 3 ரூபாய் தமிழ்க் கூறும் நல்லுலகின் மீது நம்பிக்கை வைத்துதான் நன்கொடைத் திட்டத்தை அறிமுகப் படுத்தினோம். வேறு வழியின்றி ‘செக்கு மாட்டுத் தனமாக' ஆண்டுச் சந்தா நிர்ணயிக்கப்படுகிறது. நன்கொடை வழங்கியவர்களின் தொகை ஆண்டுச் சந்தா கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

பணவிடை (M.O) யில் பெயர் குறிப்பிடாத நண்பர் கடிதம் மூலம் தொடர்பு கொண்டு - முகவரி தந்து உதவ வேண்டுகிறோம். தொடர்ந்து கவிதைகளில் வித்யாசமான, புதுமையான, படைப்புகளுக்கு சோதனை முயற்சிகளுக்கும் ‘அணி' ஆதரவாய் இருக்கும்.
அன்புடன்,
அன்பாதவன் (09869481106)
மதியழகன் சுப்பையா.(09821847464)



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...



படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. படைப்புகளை அனுப்பும்போது தாங்கள் பயன்படுத்திய எழுத்துரு எதுவென்பதைத் தெரியப்படுத்தவும்.

Keetru | Tamil | Tamilnadu | Literature | Cinema | Recipe | Joke
Submit Your Feedback
Name
Email
Message
 



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

www.anaruna.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.punnagai.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

www.kannottam.keetru.com

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com
Hosted & Maintained by india intellect
Best viewed in Windows 2000/XP