நானொன்றும் தேவ தூதனல்ல விவேகபாரதி
மதிப்பீடுகளான
சமூகத்தின் வாயில்களில்
உன்னை அழைத்துச்
செல்ல அச்சமுறுகிறேன்....
நீயென் பிரியமானவன்தானெனினும்
சமூகம் என்பால் கொண்ட
அளவீடுகளை
அழித்து விடுகிறாய்
உன்னையுமறியாமல்
சிறுபிள்ளையின் மணல்வீட்டைப் போல்...
வீண் வார்த்தைகளால்
என் மீதானக் கண்ணோட்டங்களைத்
தகர்த்து
சமூகத்தின் முன் நிர்வாணப்படுத்திவிட்டு
மன்னிப்புக் கோருகிறாய்
வீடு திரும்பியபின்...
மன்னிக்கவோ
உயிர்த்தெழவோ
நானொன்றும் இஸ்ரேலின்
தேவ தூதனல்ல
|
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. படைப்புகளை அனுப்பும்போது தாங்கள் பயன்படுத்திய எழுத்துரு எதுவென்பதைத் தெரியப்படுத்தவும்.
|
Keetru | Tamil | Tamilnadu | Literature | Cinema | Recipe | Joke
|
|
 |
|