பிரவாக நீரில் சிற்றெறும்பு கு. உமாதேவி
என் போக்கிற்கு வாவெனப்
போராடுகிறேன்
முடியாதென முடிவில் கெஞ்சுகிறேன்
ஆங்காரமாய்த்
தன் போக்கில் போகும்
வாழ்க்கையை
ஆனால் அதுவோ
என் போக்கிற்கு நீ வாவென
வலுக்கட்டாயமாய்
பலவந்தப்படுத்தி
இழுத்துச் செல்கிறது
என்னை
அதன் போக்கில் போவதைத் தவிர
வேறென்ன செய்ய
பல் யானை பலம் படைத்த
அதின் முன்னால்...
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|