ஞாபக சக்தி பா. தமிழ்ச்செல்வி
மேலெழுந்த சூரிய கிரணங்கள்
முகம் தாக்கி உறக்கம் களைந்து
தலையணைசுகமேறி...
இமைகள் விழிக்க மறுக்க
எனை அணைத்த தூக்கம்
‘குழந்தை அழுது அப்படி என்ன தூக்கம்'
கணவரின் பேச்சில் எழுந்து
மூலைக்கொன்றாய் சிதறிக் கிடக்கும்
போர்வை, தலையணைகளை
அணி சேர்ப்பதற்குள் கிளம்பும் அடுத்த குரல்
‘எங்கோ வைத்த எதையோ காணோம்'
தேடும் பொருளை
தேடாமலே எடுத்து தரும்போதெல்லாம்
‘உனக்கு ஞாபக சக்தி'
உங்கள் பொருட்களை
சரியாக எடுத்து தரும் நான்
என் பொருட்களை எங்கே வைத்தேன்
தேடுகிறேன் தினமும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|