கருப்பு நிலா கு.அ. தமிழ்மொழி
கருப்பு நிலவானது
வெண்ணிலா,
தொழிற்சாலைபுகை.
நடிகன் படத்திற்கு
பால் முழுக்கு
பசியால் அழும்குழந்தை
சுவரில் விரிசல்
காணவில்லை
சிலந்தி
நிலத்திற்கு அழகு மரம்
வான் மழையே
மரத்திற்கு உரம்.
கடிகாரமாய் கோழி
மறுநாள் ஞாயிறு
விருந்தானது வாழி.
ஒழிக்க வேண்டும் சாதி
திருக்குறளை
கசடறச் கற்பாய் ஓதி
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|