மனித வெடிகுண்டுகளைப் பிரசவிக்கும்... புதிய மாதவி
ரம்பை ஊர்வசி
இந்திராணி
அந்தப்புரத்தை அலங்கரிக்கும்
ஆயிரம் தேவதைகள்
இருந்தும் கூட
எப்போதும் அகலிகைளின்
அல்குல் தேடி
அலைகிறது
தேவலோகத்து
இந்திரனின் வஜ்ராயுதம்
கிழிந்த யோனிகளுள்
பிணமாக மல்லாந்து கிடக்கும்
மண்ணின் வேர்களைப் பிழிந்து
தாகம் தீர்த்துக் கொள்கின்றன
இந்திரனின் வெள்ளை யானைகள்.
கல்லாக இருக்கும் போது
காதலாகி கசிந்துருகிய
அகலிகையின் முலைப்பாலிருந்து
விஷம் கலந்து வடிகிறது
சாபவிமோசனம் கொடுத்தவனைச்
சாகடிக்கும் நாட்களுக்காய்
காத்திருக்கிறது
மனித வெடிகுண்டுகளைப்
பிரசவிக்கும் அகலிகையின் யோனி.
|
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. படைப்புகளை அனுப்பும்போது தாங்கள் பயன்படுத்திய எழுத்துரு எதுவென்பதைத் தெரியப்படுத்தவும்.
|
Keetru | Tamil | Tamilnadu | Literature | Cinema | Recipe | Joke
|
|
 |
|