எதிர்மறைப் புனைவுகள் நிலா பாரதி
அழைப்பைத்
தட்டிக் கழித்தேப்
போகிறதுன் கோபம்...
மரணம் குறித்துப்
பேசியே துவம்சம் செய்கிறாய்....
பொழுதுகளை
ஒவ்வொரு நொடியையும்
இனிமையாகத் தொடங்க
நினைக்கு மெனக்கு
எரிச்சலை எழுப்புகின்றன....
எதிர்மறைப் புனைவுகள்
இயல்பு தானெனினும்
சில நேரங்களில்
இருப்பினை கேலிசெய்யும்
விதமாய் அமைந்து விடுகிறது....
முயற்சிக்கிறேன் நாளும்
உனது பழக்கத்தை மாற்ற
முளைக்கத் தொடங்குகிறது
புதிய விதை .
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|