புரியும் வேதனை நளாயினி தாமரைச்செல்வன்
வேலையால் வந்து
கோலுக்குள் இருந்து
ரிவி பார்த்தபடி
அதிகாரம் செய்யும் கணவனே,
சற்று நேரம்
நீ மிதிக்கும் மனைவியாய் மாறு.
புரியும் வேதனை
வேலைக்குப் போய் வா
சமைத்துப் போடு,
சலவை செய்
பிள்ளைகளைப் பராமரி
பாடம் செல்லிக் கொடு,
கத்திக் குதறும்
கணவனுக்காய் நடுங்கு.
கண்களைச் சுழற்றி
நித்திரை வந்தாலும்
வெளியில் போன
கணவனுக்காய்
நடுநிசி வரை
சாப்பாட்டுக் கோப்பையுடன்
காத்திரு.
சோர்வு உடம்பைத் தாக்க
உணர்வு ஏதுமற்று
வர்ணனை செய்யும் கணவனின்
உடற்பசி தீர்த்து
தூங்கு ஜடமாய்த்
காலை கண் எரிவுடன் விழித்து
அரக்கப் பறக்க எல்லாம் முடித்து
வேலைக்குப் போ.
வேலையால் வந்து
கோலுக்குள் இருந்து
ரிவி பார்த்தபடி
அதிகாரம் செய்யும் கணவனே
சற்று நேரம் நீ மிதிக்கும் உன்
மனைவியாய் மாறு
புரியும் வேதனை.
|
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. படைப்புகளை அனுப்பும்போது தாங்கள் பயன்படுத்திய எழுத்துரு எதுவென்பதைத் தெரியப்படுத்தவும்.
|
Keetru | Tamil | Tamilnadu | Literature | Cinema | Recipe | Joke
|
|
 |
|