பூனை கவிதைகள் கு. மலை மொழி
நீ பிறந்ததிலிருந்தே
என்னோடு ஒட்டிக்கொண்டது
உன் உறவு....
அன்னையிடம் பாலருந்தும் நேரம் போக
என்னோடுதான் கழித்திருக்கிறாய்
மிச்சங்களை
காலத்தின் கட்டாயத்தால்
பிரிந்துவிட்டேன் என்னிடமிருந்து
உன்னை
நீ இருக்கும் திசை நோக்கிப்
பயணப்படும் நேரங்களில்
உன்னை எண்ணியபடியே...
நானும்
***********
நாற்காலிச் சண்டை எங்களுக்குள்
வழக்கமாய் நடப்பதுதான் !
இன்றைக்குக் கொஞ்சம்
வித்தியாசமாய் ஆரம்பித்தது!
சண்டைக்கு முற்றுப்புள்ளி
வைப்பதற்காய்ப் போடப்பட்ட
புதிய நாற்காலியில்
அவசரமாய்ச் சென்று
அமர்ந்து கொண்டேன் !
வெற்றிப் பெருமிதத்தோடுப்
பார்வையைத் திருப்பினேன்.
பழைய நாற்காலியை நோக்கி !
அமைதி பூங்காவாய் வீற்றிருந்தது
இருக்கையை இழுத்த சப்தத்தில்
தூக்கத்திலிருந்து விடுபட்ட
பூனை !
|
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. படைப்புகளை அனுப்பும்போது தாங்கள் பயன்படுத்திய எழுத்துரு எதுவென்பதைத் தெரியப்படுத்தவும்.
|
Keetru | Tamil | Tamilnadu | Literature | Cinema | Recipe | Joke
|
|
 |
|